என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பீர் பாட்டில்கள்"
- பிரம்மபுரம் என்ற இடத்தில் சூறைக்காற்று வீசியதில் மின்கம்பிகள் அறுந்து நடுரோட்டில் விழுந்தன.
- சூறைக்காற்று அடித்து பீர் பாட்டில்கள் உடைந்து நொறுங்கியதை பார்த்து விற்பனை நிலைய ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்தது. கொச்சி மாவட்டத்தில் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில் கொச்சி அருகே உள்ள காக்கநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்று வீசியது. இதில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்துவிழுந்தன. மேலும் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சேதமடைந்தது.
பிரம்மபுரம் என்ற இடத்தில் சூறைக்காற்று வீசியதில் மின்கம்பிகள் அறுந்து நடுரோட்டில் விழுந்தன. அப்போது அந்த வழியாக சென்ற கார்களின் மீதும் மின் கம்பிகள் விழுந்தது. காருக்குள் இருந்தவர்கள் வெளியேற முடியாமல் தவித்தனர்.
இதுகுறித்து மின் வாரிய அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் மின் சப்ளை நிறுத்தப்பட்டது. அதன்பிறகு காரின் உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். மின்கம்பிகள் அறுந்து விழுந்ததும் காருக்குள் இருந்தவர்கள் அவசரப்பட்டு வெளியே வராததாலும், உடனடியாக மின் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மின் சப்ளையை நிறுத்தியதாலும், அதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.
இந்த திடீர் சூறைக்காற்று காக்கநாடு இன்போபார்க் அருகே செயல்படும் மது விற்பனை நிலையத்தையும் விட்டுவைக்கவில்லை. கண்ணாடி கதவு உள்ளிட்டவைகளுடன் கவர்ச்சிகர தோற்றுத்துடன் அமைக்கப்பட்டுள்ள அந்த விற்பனை நிலையம் நேற்று வழக்கம்போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென சூறைக்காற்று சுழன்று அடித்தது. அதில் கடைக்குள் பீர் பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் சரிந்து விழுந்தன. இதனால் 250 பெட்டிகளில் இருந்த 2,500 பீர் பாட்டில்கள் உடைந்து நொறுங்கின. உடைந்து நொறுங்கிய பீர் பாட்டில்கள் அனைத்தும் கடை முழுவதும் சிதறிக் கிடந்தது.
சூறைக்காற்று அடித்து பீர் பாட்டில்கள் உடைந்து நொறுங்கியதை பார்த்து விற்பனை நிலைய ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். விற்பனை நிலையம் முழுவதும் பாட்டில்கள் சிதறிக்கிடந்ததால் அவர்கள் வெளியே வரமுடியவில்லை.
மேலும் சூறைக்காற்று அடித்தபோது விற்பனை நிலையத்தில் இருந்த ஏராளமான மது பாட்டில்கள் தூக்கி வீசப்பட்டன. இருந்த போதிலும் அதிலிருந்து ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் காயம் எதுவும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.
- ாமநாதபுரம் அருகே டாஸ்மாக் கடையில் திருட்டு நடந்துள்ளது.
- ரூ.860, 9 பீர் பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் சூப்பர்வைசராக தனுஷ்கோடி (52) இருந்து வருகிறார்.
கடந்த 5-ந் தேதி இரவு 10 மணிக்கு இவர் கடையை அடைத்து விட்டு வீட்டிற்கு சென்றார். இரவு ரோந்து சென்ற போலீசார் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டனர்.
இதையடுத்து தனுஷ்கோடிக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டும், ஷட்டரை உடைத்தும் உள்ளே இருந்த சில்லறை பணம் ரூ.860, கடையின் இருப்பை சரி பார்த்தபோது 650 மில்லி பிடிக்கக்கூடிய 9 பீர் பாட்டில்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்